‘யாரு அட்வைஸ் பண்ணுறதுன்னு வேணாம்…’ ட்வீட் போட்டு மதுமிதா ரசிகர்களிடம் சிக்கிய வனிதா

  0
  2
  வனிதா

  தம்பிகளே, தங்கச்சிகளே நாம்  வலைதள பயனாளர்களாக  இருப்பதற்கு வெட்கப்படவேண்டும்.

  தனக்கு ஏற்பட்ட தொந்தரவு காரணமாக 25 வயது பாப் பாடகி உயிரிழந்தது குறித்து கருத்து தெரிவித்து சிக்கலில் சிக்கியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார் 

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதாவை அறியாத ஆட்களே இருக்க முடியாது.  அந்த அளவிற்கு தனது வாயால் பலரது வெறுப்பை சம்பாதித்தார். இருப்பினும் ஒரு தாயாக  பிக் பாஸ் வீட்டில் வனிதா நடந்து கொண்ட விதம் அவரின் மற்றொரு முகத்தை உலகத்திற்கு காட்டியது. தொடர்ந்து சமூகவலைதளங்களில்  ஆக்டிவாக இருக்கும் வனிதா பிக் பாஸ் தவிர்த்து மற்ற விஷயங்களுக்காகவும் கருத்து தெரிவித்து வருகிறார்.  

   

  இந்நிலையில் இவர் சமீபத்தில் தென் கொரியாவை சேர்ந்த பாடகியின் மரணம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், தம்பிகளே, தங்கச்சிகளே நாம்  வலைதள பயனாளர்களாக  இருப்பதற்கு வெட்கப்படவேண்டும். இதற்கு நாமும் பொறுப்பேற்கவேண்டும். இது ஒன்றும் பிக்பாஸ் இல்லை. இது நிஜ வாழ்க்கை. இணையத்தில் தனக்கு தனக்கு ஏற்பட்ட தொந்தரவு காரணமாக 25 வயது பாப் பாடகி உயிரிழந்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

  vanitha

  வனிதாவின் இந்த ட்வீட்டை கண்ட நெட்டிசன்கள் சிலர் அவருக்கு பாராட்டு தெரிவித்தும், சிலரோ மதுவை ஏன்  டார்கெட் பண்ணி வெளியில் துரத்தினீங்க வனிதா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.