யாருக்கு ஓட்டு? மீண்டும் தொடங்கியது இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதல்!

  0
  5
  இலங்கை தமிழர்கள்

  கோத்தபய ராஜபக்சே அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே இலங்கைத் தமிழர்கள் மீது சிங்களர்கள் மீண்டும் தாக்குதல்கள் நடத்த தொடங்கியுள்ளனர். இதனால், அங்கு தமிழர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
  இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே நேற்று (நவம்பர் 18) பதவி ஏற்றார். கோத்தபய பதவி ஏற்ற பிறகு இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று பல தமிழ்த் தலைவர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.

  கோத்தபய ராஜபக்சே அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே இலங்கைத் தமிழர்கள் மீது சிங்களர்கள் மீண்டும் தாக்குதல்கள் நடத்த தொடங்கியுள்ளனர். இதனால், அங்கு தமிழர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

  gotabaya rajapaksa

  இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே நேற்று (நவம்பர் 18) பதவி ஏற்றார். கோத்தபய பதவி ஏற்ற பிறகு இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று பல தமிழ்த் தலைவர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். அதற்கு ஏற்றார்போல, தமிழர்கள் மீது தாக்குதல் தொடங்கியுள்ளது. 
  கேக்காலை மாவட்டம் யட்டியாந்தோட்டையில் வசிக்கும் மலையக தமிழர்கள் வீடுகளுக்குள் புகுந்த சிங்களர்கள், யாருக்கு வக்களித்தீர்கள் என்று கேட்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பெண்களிடமும் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.

  eelam

  இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால், குடிபோதையில் சிலர் தகராறு செய்தனர். பிரச்னை ஒன்றும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தேர்தலில் வாக்களிக்கும்போது தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது, கோத்தபய பதவியேற்ற முதல் நாளிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இலங்கை தமிழர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.