‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தில் நடிகராக களமிறங்கும் பிரபல இயக்குநர்!

  0
  8
  மோகன் ராஜா

  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் இயக்கத்தில்‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.

  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் இயக்கத்தில்‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்திற்கு கே.பிரசன்னா இசையமைக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வெங்கட கிருஷ்ணா இயக்கி வரும் இந்தப் படத்தில் பிரபல இயக்குனர் மோகன்ராஜா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

  யாதும் ஊரே யாவரும் கேளிர்

  மோகன் ராஜா இதற்கு முன்பே ‘என்ன சத்தம் இந்த நேரம்’  என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.  அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக காதல் மன்னன் படத்தில் நடித்த நடிகை மானு நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் தனது கவனத்தை நடிப்பின் பக்கம் திருப்பியுள்ளார். 

  என்ன சத்தம் இந்த நேரம்

  விஜய் சேதுபதி நடிப்பில் சங்க தமிழன், மாமனிதன், லாபம், தளபதி 64, கடைசி விவசாயி ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராகவுள்ளது குறிப்பிடதக்கது.