ம.பி-யில் குழப்பம் செய்யும் அவசரத்தில் எண்ணெய் விலை குறைவை தவறவிட்டிருப்பீர்கள்! – மோடியை கலாய்த்த ராகுல்

  0
  1
  ragul gandhi

  மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா மூலம் இதற்கான செயலில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளனர். இது பற்றி ராகுல் காந்தி இதுவரை கருத்து கூறாமல் இருந்தார்.

  மத்திப் பிரதேச காங்கிரஸ் அரசின் நிலைத் தன்மையை சிதைக்கும் அவசரத்தில் சர்வதேச அளவில் எண்ணெய் விலை குறைந்திருப்பதை மறந்துவிட வேண்டாம் என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.
  மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா மூலம் இதற்கான செயலில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளனர். இது பற்றி ராகுல் காந்தி இதுவரை கருத்து கூறாமல் இருந்தார்.

  modi

  இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “மத்தியப் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசின் நிலைத் தன்மையை சிதைக்கும் அவசரத்தில், சர்வதேச அளவில் எண்ணெய் விலை 35 சதவிகிதம் குறைந்திருப்பதை கவனிக்காமல் விட்டிருப்பீர்கள். பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.60க்கு கீழ் கொண்டுவந்து இந்த விலை குறைவின் பலனை மக்களுக்கு அளிப்பீர்களா? இது வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்” என்று கூறியுள்ளார்.