ம.பி முதல்வராக இன்று பதவியேற்கிறார் சிவ்ராஜ் சிங் சௌகான்!

  0
  1
  shivraj-singh-chauhan.jpg

  மத்தியப் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை பா.ஜ.க அகற்றியது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்து தனக்கு பெரும்பான்மையை ஏற்படுத்திக் கொண்டது பா.ஜ.க. இதனால், கமல்நாத் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர்.

  மத்தியப் பிரதேச முதல்வராக பா.ஜ.க-வின் சிவ்ராஜ் சிங் சௌகான் இன்று பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
  மத்தியப் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை பா.ஜ.க அகற்றியது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்து தனக்கு பெரும்பான்மையை ஏற்படுத்திக் கொண்டது பா.ஜ.க. இதனால், கமல்நாத் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர்.

  shivraj-chouhan

  இந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த பாரதிய ஜனதா கட்சிக்கு தற்போது சட்டப்பேரவையில் உள்ள காலியிடங்கள் அடிப்படையில் பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதைத் தொடாந்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போபாலில் இன்று மாலை பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் கூடி, கட்சி சட்டமன்றத் தலைவராக சிவ்ராஜ் சிங் சௌகானை தேர்வு செய்ய உள்ளனர். அவர்கள் ஆதரவு கடிதங்களை பெற்றுக் கொண்டு ஆளுநரை சந்தித்து சிவ்ராஜ் சிங் சௌகான் தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி உரிமை கோர உள்ளார். இன்று மாலை நடக்கும் எளிய விழாவில் அவர் மத்தியப் பிரதேச முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.