மோதிரத்தை அடகு வைத்து தோழிகளோடு விருந்து… தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை!

  0
  3
  Representative Image

  சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர்கள் சண்முகம் – லட்சுமி. சண்முகம் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு லாவண்யா (17), புவனேஷ்வரி (14) என இரண்டு மகள்கள் உள்ளனர்.
  நேற்று சண்முகமும் லட்சுமியும் காலையிலேயே வேலைக்கு சென்றுவிட்டனர். புவனேஷ்வரி அறை பூட்டியே இருந்ததுள்ளது. நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. பள்ளிக்கு செல்ல நேரமாகிறதே என்று அக்கா லாவண்யா கதவை தட்டியுள்ளார். ஆனாலும் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாவண்யா கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது புவனேஷ்வரி தூக்கில் தொங்கி உயிரை விட்டிருந்தார். 

  மோதிரத்தை அடகு வைத்து தோழிகளுடன் கொண்டாடியதை தந்தை கண்டித்ததால், பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
  சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர்கள் சண்முகம் – லட்சுமி. சண்முகம் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு லாவண்யா (17), புவனேஷ்வரி (14) என இரண்டு மகள்கள் உள்ளனர்.
  நேற்று சண்முகமும் லட்சுமியும் காலையிலேயே வேலைக்கு சென்றுவிட்டனர். புவனேஷ்வரி அறை பூட்டியே இருந்ததுள்ளது. நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. பள்ளிக்கு செல்ல நேரமாகிறதே என்று அக்கா லாவண்யா கதவை தட்டியுள்ளார். ஆனாலும் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாவண்யா கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது புவனேஷ்வரி தூக்கில் தொங்கி உயிரை விட்டிருந்தார். 

  Student suicide

  இது குறித்து பெற்றோருக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து உடலைக் கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சில தினங்களுக்கு முன்பு சண்முகத்தின் தங்க மோதிரத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று அடகு வைத்து, அந்த பணத்தைவைத்து தோழிகளுக்கு விருந்து வைத்துள்ளார் புவனேஷ்வரி. இது பற்றி தகவல் தெரிந்த சண்முகம் புவனேஷ்வரியை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த புவனேஷ்வரி தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவந்தது. தந்தை திட்டியதால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.