மோடி பிரதமாராகாவிட்டால் ராமர் கோவிலில் தற்கொலை செய்துகொள்வேன்’…இதென்னய்யா புது ட்ரெண்டு…

  0
  6
  மோடி

  நரேந்திரமோடி இந்தத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமராகவிட்டால் தாம் அயோத்தியிலுள்ள ராமர் கோவில் வாசல் முன்பு அமர்ந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்

  நரேந்திரமோடி இந்தத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமராகவிட்டால் தாம் அயோத்தியிலுள்ள ராமர் கோவில் வாசல் முன்பு அமர்ந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

  wazeem rizvi

  உத்தரப்பிரதேச மாநில ஷியா அமைப்பின் வக்பு வாரியத் தலைவர் வசீம் ரிஷ்வி. பல சர்ச்சைகளுக்குப் பேர் போனவர். நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அவர்,’ தேசம் என்பது எப்போதுமே மதங்களை விட முக்கியமானது. இதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள முயல்வதில்லை. அதனால்தான் எனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

  ramar temple ayodhya

  இப்போதும் கூட மோடியின் ஆட்சி முடிவுக்கு வந்தால் என்னைக் கொன்று விடுவதாக மிரட்டிக்கொண்டே இருக்கின்றனர். மோடி மிகத் திறமையான பிரதமர். அவர்தான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். அப்படி ஒருவேளை அவர் ஆட்சிக்கு வரத் தவறினால் இந்த முஷ்லிம்களின் கையால் சாவதை விட நானே போய் ராமர் கோவில் வாசலில் அமர்ந்து தீக்குளித்து இறந்துவிடுவேன்’ என்று மிரட்டுகிறார் வசீம் ரிஷ்வி.

  election

  இந்த ரிஷ்வி தான் வகிக்கும் வக்பு வாரியத்தில் ஏகப்பட்ட ஊழல்கள் செய்திருப்பவர் என்றும் அந்த ஊழல்களிலிருந்து தப்பிக்கவே இப்படி மோடி மஸ்தான் வேலைகள் காட்டுவதாகவும் தகவல்.