மோடியை விமர்சித்தால் தண்டனை! அதிரடி காட்டிய நீதிபதி!

  28
  மோடி

  பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்று மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். மத்திய அரசின் இந்தி மொழி குறித்தான கொள்கைகளை குறிப்பாக தமிழக இளைஞர்கள் தொடர்ந்து விமர்சித்தும், எதிர்த்தும் வருகிறார்கள்.

  பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்று மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். மத்திய அரசின் இந்தி மொழி குறித்தான கொள்கைகளை குறிப்பாக தமிழக இளைஞர்கள் தொடர்ந்து விமர்சித்தும், எதிர்த்தும் வருகிறார்கள். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் அவரது முகநூல் பக்கத்தில்  பிரதமர் மோடி குறித்து தவறான முறையில் சித்தரித்து கருத்துப் படம் ஒன்றினை பதிவேற்றியுள்ளதாக தெரிகிறது. பிரதமரை விமர்சித்த குற்றத்திற்காக ஜெபின் சார்லஸ் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தார்கள்.

  modi

  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ததையடுத்து, தனக்கு முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சார்லஸ் மனு தாக்கல் செய்தார். சார்லஸின் மனுவின் மீதான விசாரணையைத் துவங்கிய நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. சார்லஸுக்கு முன்ஜாமீன் வழங்கினாலும், பிரதமரை விமர்சித்த காரணத்தினால், அடுத்த ஒரு வருட காலத்திற்கு சார்லஸ் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடையும் விதித்தது. தவிர, மன்னிப்புக் கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனைகளை ஜெபின் சார்லஸ் மீறினால் முன் ஜாமீன் ரத்தாகும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.