மோடியை மிரட்டி ட்ரம்ப் கேட்கும் மருந்து பிறந்தது நம்ம ஊரில்தான் தெரியுமா?

  0
  39
  chinchona

  மலேரியா என்பதும் ,அம்மை என்பதும்தான் இந்தியாவுக்கு வந்த வெள்ளையருக்கு அச்சமூட்டிய இரண்டு பயங்கர டிராபிக்கல் நோய்கள்.இதில் மலேரியா ஜுரத்திற்கு சின்கோனா மரத்தின் (Chinchona) பட்டையில் மருந்திருக்கிறது என்பதை 17 ம் நூற்றாண்டிலேயே கண்டுபிடித்து விட்டார்கள்.

  மலேரியா என்பதும் ,அம்மை என்பதும்தான் இந்தியாவுக்கு வந்த வெள்ளையருக்கு அச்சமூட்டிய இரண்டு பயங்கர டிராபிக்கல் நோய்கள்.இதில் மலேரியா ஜுரத்திற்கு சின்கோனா மரத்தின் (Chinchona) பட்டையில் மருந்திருக்கிறது என்பதை 17 ம் நூற்றாண்டிலேயே கண்டுபிடித்து விட்டார்கள்.ஆனால் அன்றைய ஆங்கில சாம்ராஜ்யத்தின் அட்சய பாத்திரமாக இருந்த இந்தியாவில் சின்கோனா இல்லை.அது தென் அமெரிக்காவில் மட்டுமே வளர்வது அப்போது கண்டுபிடிக்கப் பட்டிருந்தது.சின்கோனா வளர சில சிறப்பு சுற்றுச்சூழல் அமைப்புகள் தேவை.அது கடல்மட்டத்தில் இருந்து 2000அடி உயரத்தில் மட்டுமே வளரும்.

  chinchona

  அதோடு நல்ல வளமான மண் இருக்க வேண்டும் .உறைபணி இருக்கக்கூடாது.ஆனால் வருடத்தில் 10 மாதகாலமாவது 200 செ.மீ மழை பெய்ய வேண்டும்.பிரிட்டிஷ் அரசின் இடைவிடாத ஆராய்ச்சிக்கு பிறகு,இத்தகைய சூழல் மலேயாவின் போர்னியோ,டார்ஜ்லிங்,ஆனைமலை ஆகிய இடங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்தி ஆனைமலையில் சின்கோனா பயிரிடப்பட்டது.10 முதல் 12 மீட்டர் உயரம் வரை கிளைகளே இல்லாமல் வளரக்கூடிய சின்கோனா மரத்தின் பட்டையில்தான் அவர்கள் தேடும் கொய்னா ( Quine) ஒளிந்து இருக்கிறது.இதைத்தொடர்ந்து 1859ல் துவங்கப்பட்ட சின்கோனா எஸ்டேட் ஐம்பதாண்டுகள் முன்புவரை வால்பாறையில் இயங்கியது.

  quine

  இங்கே தயாரிக்கப்பட்ட கொய்னா மாத்திரைகளைத்தான் தேசிய மலேரியா ஒழிப்புத் திட்ட அலுவலர்கள் இந்தியாவெங்கும் வினியோகித்தார்கள்.நேஷனல் மலேரியல் எராடிகேஷன் புரோகிராம் என்பதன் சுருக்கமாக,என்.எம்.ஈ.பி இன்ஸ்பெக்டர் என்பது அவர்கள் பதவி.அது வாயில் நுழையாத மக்கள்,அவரை என்னெம்பீப்பி என்று அழைக்கும் அளவுக்கு 70கள் வரை அவர்கள் பிரபலமாக இருந்தனர்.1934ல் கொய்னா மருந்தை ஜெர்மன் விஞ்ஞானிகள் செயற்கையாக உருவாக்கிய பிறகு மெல்ல மெல்ல சின்கோனா மரம் தன் ஹீரோ அந்தஸ்த்தை இழந்து விட்டது.இதற்காக கட்டப்பட்ட அலுவலகம்,தொழிலாளர் குடியிருப்புகள் எல்லாம் இப்போது பாழடைந்து கிடக்கின்றன.

  chinchona 78

  கொய்னா மருந்தைக் குறித்து 50 களில் உருவான குழந்தைகள் பாடலான ” அதோ பாரு மைனா,
  ஆசுபத்திரி கொய்னா,எங்கப்பா பேரு நைனா,நாம்போறேன் சைனா” வும் வழக்கொழிந்து போய்விட்டது.இப்போது ஹைட்ராக்சிகுளோரோ கொய்ன் என்கிற நவீன அவதாரம் எடுத்துவிட்ட பழைய ஆனைமலை கொய்னாவை ட்ரம்பின் உறுமலும் , 56 இஞ்ச் மோடியின் பம்மலும் மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டன.