மோடியை சந்திக்கிரார் மம்தா !

  0
  1
  மோடியை இன்று சந்திக்கும் மம்தா

  கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா மாநில வளர்ச்சிக்கான நிதி, பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா போன்ற பொது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்

  பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக இன்று மேற்கு வஙஂக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவரது அலுவலகத்தில் சந்திக்க உள்ளார்.

  மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அம்மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிரார். மோடி மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்ததற்கு பின் முதல் முறையாக மம்தாவை சந்திக்க உள்ளார். நரேந்திர மோடி

  கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா மாநில வளர்ச்சிக்கான நிதி, பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா போன்ற பொது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் மேற்கு வங்கத்தை வங்காளம் என்று பெயர் மாற்ற கோரியுருந்தும் மத்திய அரசிடமிருந்து எந்த ஒரு ஒப்புதலும் வராமல் இருப்பது பற்றியும், குடியுரிமை பட்டியல் கணக்கெடுப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.மம்தா பேனர்ஜி

  சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ – ஆல் தேடப்பட்டு வரும் கொல்கத்தாவின் முன்னாள் ஆணையரும், சிஐடி கூடுதல் தலைமை இயக்குநருமான ராஜீவ் குமாருக்கு ஆதரவாக முன்பு மம்தா தர்ணா போராட்டத்தில்  ஈடுப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இது குறித்து பிரதமரிடம் மம்தா உதவி கோருவார் என்று அரசியல் வட்டாரங்கள் விமர்சிக்கின்றனர்.

  இந்த ஐந்தாண்டு ஆட்சியில் மோடியை கடுமையாக விமர்சித்து வரும் மம்தாவின் இந்த சந்திப்பு அவருக்கு பயணளிக்குமா என்பது இனிமேல் தான் தெரியவரும்.