மோடியுடன் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே!

  0
  11
  Uddhav Thackeray

  மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
  மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி அமைக்க தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சிவசேனா கேட்டது.

  மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
  மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி அமைக்க தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சிவசேனா கேட்டது. ஆனால், பா.ஜ.க இந்த நிபந்தனையை ஏற்கவில்லை. இதனால் அரசியலில் காட்சி மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது சிவசேனா.

  pm-modi-with-uddhav

  முதல்வராக பதவி ஏற்பவர்கள் நாட்டின் பிரதமரை சந்திப்பது மரியாதை நிமித்தமான ஒன்று. மகாராஷ்டிரா முதல்வராக பதவி ஏற்றாலும் கூட உத்தவ் தாக்கரே மோடியை நேரில் சென்று சந்திக்காமல் இருந்தார். இந்தநிலையில் இன்று அவர் மோடியை சந்திக்க உள்ளதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 
  மாநில முதல்வர் என்ற வகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாகவும், அரசியல் ரீதியான உரையாடல் இருக்காது, முழுக்க முழுக்க மகாராஷ்டிரா மாநில முன்னேற்றம் தொடர்பாக மட்டுமே உத்தவ் தாக்கரே பேசுவார் என்று அக்கட்சி கூறியுள்ளது. இருப்பினும், வேறு ஏதும் நல்ல செய்தி வந்துவிடாதா என்று பா.ஜ.க தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.