மோடியின் 100 நாள் ஆட்சி கொடுங்கோன்மை, குழப்பம், அராஜகம்- வெளுத்து வாங்கிய காங்கிரஸ்

  0
  3
  காங்கிரஸ்

  மோடியின் முதல் 100 ஆட்சியை கொடுங்கோன்மை, குழப்பம் மற்றும் அராஜகம் என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

  தொடர்ந்து 2வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ. அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் மற்றும் 3 நாட்கள் தாண்டி விட்டது. தற்போது முதல் 100 நாட்களில் மேற்கொண்ட செயல்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் அறிக்கைகளை தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில், மோடியின் முதல் 100 நாள் ஆட்சி காலத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

  பிரதமர் மோடி

  காங்கிரஸ் கட்சி டிவிட்டரில், பிரதமர் மோடியின் முதல் 100 நாள் ஆட்சியை கொடுங்கோல், குழப்பம் மற்றும் அராஜகம் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி 2 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து விட்டது. ஆனால் நம் நிதியமைச்சர் பொருளாதாரம் சரிவை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.  அலட்சியம் மற்றம் வஞ்சகம் பாதையில் பா.ஜ. தொடர்ந்து சென்றால் நாம் சரிவை நோக்கி செல்வோம்.

  வாகன துறை இதுவரை இல்லாத அளவுக்கு கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா, சீனா நாடுகளை காட்டிலும் நமது பொருளாதாரம் நன்றாக உள்ளதாக அரசு சொல்கிறது என மேலும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. 

  கபில் சிபல்

  காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் டிவிட்டரில், நாடாளுமன்றத்தை நோட்டீஸ் போர்டு போல் பா.ஜ. பயன்படுத்தகிறது. மசோதாக்கள் மீது விவாதம் அல்லது ஆலோசனை கிடையாது ஆனால் சம்பிரதாயத்துக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது என குற்றச்சாட்டை பதிவு செய்து இருந்தார்.