‘மோடிக்கு தெலுங்கில் வாழ்த்து கூறிய தமிழிசை’ : பாவம்ப்பா ஆளுநராகி அவங்க படுறபாடு இருக்கே அய்யய்யய்யோ….!

  0
  1
  தமிழிசை சவுந்தரராஜன்

  பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

  தெலுங்கானா : தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பிரதமர் மோடிக்கு தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். 

  பிரதமர் நரேந்திர மோடி தனது  69வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனால் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியினர் நேற்றிரவு முதலே கொண்டாடி மகிழ்ந்தனர்.பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

   

  அந்த வகையில் பாஜகவின் முன்னாள் மாநில  தலைவரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன்  பிறந்தவர் மோடிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.   தெலுங்கில் பதிவிட்டுள்ள அவர், தெலுங்கானா மக்கள் சார்பில் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

   

  முன்னதாக தமிழிசை சொந்தரராஜன், அடுத்த 15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று, அம்மாநில மக்களுடன் சரளமாக உரையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதன்படி  நேற்று  முதன்முறையாகக் கோதாவரி ஆற்றில் படகு விபத்து குறித்து தெலுங்கில் தமிழிசை ட்வீட் போட்டார். அதற்கு முன்பு தமிழில் ட்வீட் போட்டதால் அம்மாநில  மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் தெலுங்கில்  ட்வீட் போட ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.