மோகம் அதிகமுள்ள நடிகர் மோகன்லால்-அதனால்தான் உடலை கட்டுக்கோப்பா வைத்திருக்கிறார்..

  0
  3
  Mohanlal

  மலையாள திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்  என்று அழைக்கப்படும் மோகன்லால் தனது உடற்பயிற்சி செய்யும்  வீடியோக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடும் சூப்பர் ஸ்டைலான புகைப்படங்கள் மூலம் நம் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை.

  மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கட்டுக்கோப்பான உடலமைப்புடன் இந்த 60 வயதிலும் காணப்படுகிறார் .இதன் ரகசியம் அவருக்கு உடற்பயிற்சி மீது அதிக மோகமுள்ளது.அதனால்தான் இந்த கட்டான உடல் கிடைத்தது,இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட அவரின் கட்டான உடல் போட்டோவுக்கு பாராட்டும் கிடைத்தது .

  மலையாள திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்  என்று அழைக்கப்படும் மோகன்லால் தனது உடற்பயிற்சி செய்யும்  வீடியோக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடும் சூப்பர் ஸ்டைலான புகைப்படங்கள் மூலம் நம் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை.மீண்டும், மோகன்லால் நம்மை  இன்ஸ்டாகிராமிற்கு அழைத்துச் சென்று ஒரு சூப்பர் நேர்த்தியான, ஸ்டைலான படத்தைப் பகிர்ந்துள்ளார்.

   

   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  Photo Courtesy : @sameer_hamsa #ootd #potd

  A post shared by Mohanlal (@mohanlal) on

   

  அதில் டிராக் பேன்ட் மற்றும் ஒரு கருப்பு சட்டை அணிந்த அவர்,சன் கிளாஸும் அணிந்து   அழகான தோற்றத்தை வெளிப்படுத்தினார்.எந்த இளம் நடிகருக்கும் ஒரு சவாலாக இன்னும் இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய புகைப்படம் நிரூபிக்கிறது.புகைப்படத்தில் அவர் தனது உடல்  தசைகளை வெளிப்படுத்துகிறார்.இது அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 
  இப்போது மோகன்லால் அரபிகடலிண்டே சிம்ஹாம் படத்தில் நடிக்கிறார்  இப்படத்தில் அசுரன் ஹீரோயின்  மஞ்சு வாரியர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார்.இதில் மோகன்லால் ஒரு கடுமையான போர்வீரராகக் நடிக்கிறார்.மேலும் நடிகரின் முதல் தோற்றம் ஏற்கனவே  அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெரிய பட்ஜெட் படத்தை   இயக்குனர் பிரியதர்ஷன் இயக்குகிறார்

   Arabikadalinte Simham