மைனர் பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்தியவர் சரமாரியாக குத்திக்கொலை!

  0
  1
  crime

  இதனை அறிந்த ராமமூர்த்தி, போலீசுக்கு தகவல் கொடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.  

  மதுரை சிந்தாமணி சாலையில் உள்ள கண்ணன் காலனியில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் ஆகியுள்ளது. இவர் வசிக்கும் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மைனர் பெண்ணுக்கும் விஜயகுமார் என்ற இளைஞருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த ராமமூர்த்தி, போலீசுக்கு தகவல் கொடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.  

  ttn

  இதனால் விஜயகுமாரும் அவரது உறவினர்களும் ராமமூர்த்தி மேல் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ராமமூர்த்தி அவரது அப்பா வீட்டுக்கு சென்று, திரும்பிக் கொண்டிருந்த போது அவரை வழிமறித்த விஜயகுமாரும் அவரது உறவினரும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். அப்போது அதனை தடுக்க முயன்ற தந்தை நல்லுசாமியையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து நல்லுசாமி அளித்த புகாரின் பேரில், விஜயகுமார் மற்றும் அவரது உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.