மைசூர் ‘ஹனுமந்து மட்டன் புலவ்’ (ஒரிஜினல்) சாப்பிட்டு இருக்கீங்களா?

  0
  6
  hotel-hanumanthu

  1930-ம் ஆண்டு அனுமந்து என்பவர் மைசூரில் துவங்கிய இந்த உணவகம் 90 வருடங்களுக்கு பிறகும் வெற்றிநடை போடுகிறது.1720 அக்பர் ரோடு, மண்டி மொகல்ல மைசூரு என்கிற முகவரியில் இயங்கும் இந்த உணவகத்தின் பெயரிலேயே ‘ ஒரிஜினல்’ என்கிற வார்த்தை இணையும் அளவுக்கு இந்த 90 வருடங்களில் அத்தனை டூப்ளிகேட் அனுமந்து உணவகங்கள் வந்து போயிருகின்றன.

  1930-ம் ஆண்டு அனுமந்து என்பவர் மைசூரில் துவங்கிய இந்த உணவகம் 90 வருடங்களுக்கு பிறகும் வெற்றிநடை போடுகிறது.1720 அக்பர் ரோடு, மண்டி மொகல்ல மைசூரு என்கிற முகவரியில் இயங்கும் இந்த உணவகத்தின் பெயரிலேயே ‘ ஒரிஜினல்’ என்கிற வார்த்தை இணையும் அளவுக்கு இந்த 90 வருடங்களில் அத்தனை டூப்ளிகேட் அனுமந்து உணவகங்கள் வந்து போயிருகின்றன.

  உணவகத்தைத் துவங்கிய அனுமந்து,அவருக்குப்பின் அவரதுமகன் பரமேஷ்,அடுத்து பரமேஷின் மகன் விஷால் என்று 90 வருடங்களாக தங்களுக்குள்ளேயே அவர்களது ஹோட்டல்  ரெசிப்பி ரகசியத்தை பாதுகாத்து வருகிறார்கள்.

  mutton briyani

  தங்கள் வெற்றியின் ரகசியம் எது என்று பரமேஷைக் கேட்டால்,அப்பாவின் கிருபையும் வாடிக்கையாளர்கள் ஆசியும் தான் என்கிறார்.அதற்கு ஒருசாட்சி அல்ல இரண்டு சாட்சிகள் இருக்கிறார்கள்.ஒருவர் மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷ்,அடுத்தது இயக்குநர் ரவிச்சந்திரன் .ஊட்டிக்கு சூட்டிங் நடக்கும்போதெல்லாம் மைசூரில் இருந்து இந்த மட்டன் புலாவ் அவர்களுக்காக ஊட்டிக்கு அனுப்பப்படுமாம்.

  மட்டன் புலவ் பாசுமதி அரிசியில்தான் செய்யப்படுகிறது.ஒரே அண்டாவில் 15 கிலோ அரிசி 15 கிலோ மட்டன் சேர்த்து செய்கிறார்கள்.மட்டன் என்றால் ஒரு ஆட்டின் தலை,மற்றும் கால்,குடல் தவிர அனைத்துப் பாகங்களையும் இந்த புலவில் சேர்க்கிறார்கள். கழுத்து,ஈரல்,கிட்னி,மாங்காய் என்று எல்லாம் கலந்திருப்பதும் இதன் அட்டகாச சுவைக்கு ஒரு அடிப்படை காரணமாக சொல்லப்படுகிறது.

  mutton-gravy

  அனுமந்து ஹோட்டலில் காலை 6.30க்கே ஆவிபறக்கும் புலவ் தயாராகிவிடுகிறது.இதன் விலை முழு பிளேட் 200 ரூபாய்,அரைப்பிளேட் 160 ரூபாய்.உள்ளூர் ஜிம்பாய்கள் காலை உடற்பயிற்சி முடித்தவுடன் இங்கே வந்துதான் களமாடுகிறார்கள்.கூடவே நாட்டுக்கோழி குழம்பு ( 160) மட்டன் சாப்ஸ் (130),போட்டி (130) கிடைக்கின்றன. 

  நீங்கள் ஒரு சாப்ஸும் ஒரு போட்டியும் வாங்கினால் இரண்டும் இரண்டு வெவ்வேறு வகையான சுவையுடன் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.ஞாயிறு காலை மட்டும் நாட்டுக்கோழி புலவ் செய்கிறார்கள். அதுவும் காலை 6.30க்கே தயாராகிவிடுகிறது.அதற்கென்று வாரம் முழுவதும் காத்திருக்கும் ரசிகர்கள் இருப்பதால் அந்த முப்பது கிலோ புலவ் ஒரு மணிநேரத்தில் தீர்ந்து விடுகிறதாம். இங்கு மட்டன் ஃபிரை,மட்டனில்,குருமா,லிவர்ஃபிரை,லெக்சூப் , சிக்கனில், பெப்பர் ஃபிரை,சில்லிச்சிக்கன்,சிக்கன் ஃபிரை என்று இன்னும் பல ஐட்டங்கள் உண்டு.அவற்றையும் சுவையில் அடித்துக்கொள்ள முடியாது,ஆனாலும் மைசூர் அனுமந்து என்றால் சாப்பாட்டு ரசிகர்களின் முதல் தேர்வு மட்டன் புலவும், சாப்ஸும்தான்.அதிலும் மட்டன் புலவில் அவர்கள் தரும் எலுமிச்சை துண்டுகளை சாறு பிழிந்து கலக்கி சாப்பிட்டுப் பார்த்தால்தான் காரணம் புரியும்.