மே 3 வரை எந்தவொரு சிறப்பு ரயில்களும் இயக்கும் திட்டமில்லை…. 39 லட்சம் முன்பதிவு டிக்கெட்டுகள் கேன்சல்….

  0
  2
  ரயில்வே அமைச்சகம்

  மே 3 வரை எந்தவொரு சிறப்பு ரயில்களும் இயக்கும் திட்டமில்லை என ரயில்வே அமைச்சகம் உறுதியாக தெரிவித்துள்ளது.

  லாக்டவுன் மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், நாட்டின் பல பகுதிகளில் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் அது தவறான தகவல் என ரயில்வே அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது. 

  ரயில்

  ரயில்வே அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020 மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் அவசரத்தை பூர்த்தி செய்வதற்காக எந்தவொரு சிறப்பு ரயில்களும் இயக்கும் திட்டம் இல்லை. அதையே கவனியுங்கள் மற்றும் இது தொடர்பான தவறான செய்திகளை மக்கள் புறந்தள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஐ.ஆர்.சி.டி.சி.

  முதல் கட்ட லாக்டவுனுக்கு பிறகு ரயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரயில்வே முதலில் அனுமதி அளித்து இருந்தது. இதனையடுத்து பயணிகள் ரயில்களில் பயணம் செய்வதற்காக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கினர். இந்நிலையில் லாக்டவுன் மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டதால் மே 3ம் தேதி வரை ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல் 15 முதல் மே 3ம் தேதிவரை ரயில் பயணத்துக்காக முன்பதிவு செய்யப்பட்ட சுமார் 39 லட்சம் டிக்கெட்டுகளை ரயில்வே ரத்து செய்ய தயாராகி வருவதாக தகவல். இது தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி. இது தொடர்பாக கூறுகையில்,  மே 3ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ரீபண்ட் முழுமையாக வழங்கப்படும். இதற்காக பயணிகள் தங்களது இ-டிக்கெட்டுகளை ரத்து செய்யவேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது.