மே-27ல் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும் விழா… பிரம்மாண்ட அரங்கை தயார் செய்யும் திமுக..!

    0
    2
    மு.க.ஸ்டாலின்

    தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என்ற நம்பிக்கையோடு, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை திமுக தலைமை துவக்கிவிட்டது.

    தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 20  தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என்ற நம்பிக்கையோடு, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை திமுக தலைமை துவக்கிவிட்டது. ஸ்டாலின்

    மக்களவை மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வரும் 23-ஆம் தேதி வெளியாகிறது. இடைத்தேர்தல் நடந்த மொத்தம் உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் நிச்சயம் 20 இடங்களுக்கு மேல்  வெற்றி கிடைக்கும். அதன் மூலம் பெரும்பான்மையான 177 உறுப்பினர்களுடன்  அதிமுக அரசை கவிழ்த்துவிடலாம் என்ற கனவுடன் மு.க. ஸ்டாலின் உற்சாகத்துடன் வலம் வருகிறார்.கலைவாணர் அரங்கம்

    அந்த நம்பிக்கையுடன் மே 23ஆம் தேதி அதிமுக அரசு கவிழும். அதனையடுத்து ஆட்சி அமைக்க மு.க. ஸ்டாலின் உரிமை கோருவார் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில், திமுக நிர்வாகிகள் மட்டுமின்றி, மூத்த தலைவர்களே உள்ளனர். பதவியேற்பு விழாவுக்கு திமுகவினரின் பரிசீலனையில் உள்ள சென்னை கலைவாணர் அரங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.ஸ்டாலின்

     மே 27ஆம் தேதி ஸ்டாலின் பதவி ஏற்பதற்கு என நாள் குறித்துவிட்டனர். அதற்கான ஏற்பாடுகளும் காதும் காதும் வைத்தாற்போல் நடக்கிறது. சென்னை கலைவாணர் அரங்கம், அல்லது நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடத்த முடிவாகியுள்ளது. தேசிய அளவில் எந்த தலைவர்களை அழைப்பது என்ற பட்டியலும் தயாராகி வருகிறது.

    ஆனால், கட்சியில் உள்ள சில சீனியர்கள், இதுபோன்ற அதீத நம்பிக்கை கடைசி நேரத்தில் பெருத்த ஏமாற்றத்தில் முடியும். மிதமிஞ்சிய கற்பனை கூடாது; எதுவானாலும் தேர்தலுக்கு பிறகு செய்து கொள்ளலாமே என்று, அறிவுரை கூறி வருகிறார்களாம்.