மேலே கால் போட்ட அபிராமி: ‘குரங் அஜார்’ என்று திட்டிய முகன்!

  0
  4
  அபிராமி - முகன்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே புது புது ரொமான்ஸ் ஓடிக் கொண்டு இருக்கிறது.

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே புது புது ரொமான்ஸ் ஓடிக் கொண்டு இருக்கிறது. அந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளது முகன் மற்றும் அபிராமி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த டாஸ்க் ஒன்றில் அபிராமி அனைவர் முன்பும் முகனிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லியிருந்தார். இருப்பினும் அபிராமியை ஒரு நல்ல நண்பராகப் பார்த்து வருவதாக முகன் கூறினார். 

  அதே போல நேற்றைய  பட்டிமன்றம் டாஸ்கில் அபிராமி, தன்னுடன் முகன் வைத்திருப்பது நட்பு மட்டும் இல்லை, அதற்கும் மேல் புனிதமானது என்று கூறியிருந்தார். ஆனால், அதனை மறுத்துப் பேசிய முகன், ‘நான் வைத்திருப்பது நட்பு மட்டும் தான் அதைத் தவிர வேறு ஒன்றுமில்லை’ என்று தெளிவாகவே சொல்லிவிட்டார். 

  losliya

  இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் முகன், சாண்டி, தர்ஷன், கவின் ஆகியோர் லிவ்விங் ஏரியாவில் இருக்கும் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அமர்ந்திருந்த அபிராமி , முகன் மீது இரண்டு கால்களையும்  மேலே போட்டு சாய்ந்த படி அமர்ந்தார். இதனால் கொஞ்சம் சங்கடம் அடைந்த முகன், அபிராமியை ‘குரங் அஜார்’என்று மலாய் பாஷையில் எச்சரித்தார். 

  அவர் சொன்னது புரியாததால் அபிராமி அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விடுகிறார். அபிராமி முகன் மீது காலை போட்டதும்  அவர் கூறிய ‘குரங் அஜார்’ என்ற சொல் மலாய் மொழியாம். அப்படி என்றால் மரியாதைக் குறைவாக நடப்பது என்று அர்த்தமாம்.