மேலும் 4 பேர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்? 

  0
  2
  neet exam

  மேலும் 4 பேர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

  மேலும் 4 பேர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
   
  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து ஒரு மாணவர் தேனி மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதாகச் 
   செய்தி வெளியானது. அதில் மாணவரின்  ஹால் டிக்கெட் புகைப்படமும், மாணவரின் புகைப்படமும்  வித்தியாசமாக இருந்துள்ளது.  இதனால் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து  தெரிவித்துள்ள தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன், ஆள்மாறாட்டம் குறித்து  இ-மெயில் மூலம் புகார் வந்தது. இதனால் மருத்துவத்துறை இயக்ககத்திற்கு ஆவணங்களை அனுப்பியுள்ளேன். புகார் எழுந்த அடுத்த நாள் முதல் சம்மந்தப்பட்ட மாணவர் உதித் சூர்யா கல்லூரிக்கு வருவதில்லை. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

  Neet

  இந்நிலையில்  மும்பையில் நீட் தேர்வு எழுதிய உதித் சூர்யா அங்குள்ள பயிற்சி மையம் மூலமாக ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் பயிற்சி மையம் மூலமாக நீட் தேர்வில் பலர் ஆள்மாறாட்டம் செய்துள்ளனரா எனவும் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை சரி பார்க்க மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது மேலும் 4 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது.  அரசு மருத்துவர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.