மேலும் மேலும் நஷ்டம்….. விழிபிதுங்கிய வோடாபோன் ஐடியா…..

  0
  6
  வோடாபோன் ஐடியா

  வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.6,438.8 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

  நாட்டின் முன்னணி செல்போன் சேவை நிறுவனங்களில் ஒன்றான வோடாபோன் ஐடியா, 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.6,438.8 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். 2018 டிசம்பர் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.5,004.6 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

  வோடாபோன் ஐடியா

  2019 டிசம்பர் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த வருவாய் 5 சதவீதம் குறைந்து ரூ.11,380.50 கோடியாக சரிவடைந்துள்ளது. 2018 டிசம்பர் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.11,982.8 கோடியாக உயர்ந்து இருந்தது.

  வோடாபோன் ஐடியா

  சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரத்தில், வோடாபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு ரூ.53 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்றால் நிறுவனத்தை மூடி விடுவோம் என வோடாபோன் ஐடியா ஏற்கனவே எச்சரிக்கை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.