மேலும் பல மக்கள் ஊரடங்குக்கு தயாராக இருங்க…. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

  0
  5
  யோகி ஆதித்யநாத்

  உத்தர பிரதேசத்தில் மேலும் பல மக்கள் ஊரடங்குக்கு தயாராக இருங்க என மக்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. மக்களின் ஆதரவால் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நிறைவடைந்தது. அதேசமயம் மக்கள் ஊரடங்கு என்பது நீண்ட யுத்தத்தின் ஆரம்பம்தான் என பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் நேற்று வலியுறுத்தினார். இந்நிலையில் பல மக்கள் ஊரடங்கு தயாராக இருங்க என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  ஊரடங்கு தினத்தில் உ.பி. சாலைகள்

  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பேட்டி ஒன்றில் கூறியதாவது: மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. இதில் 11 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதற்கு மேல் உயர கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

  உணவு தானியங்கள்

  அதனால் இன்று (நேற்று) நடைபெறும்மக்கள் ஊரடங்கை வெற்றி பெற செய்ய வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பேன். அவசியம் ஏற்பட்டால் இது போன்ற பல மக்கள் ஊரடங்கு மற்றும் தனிமை படுத்துலுக்கு தயாராக இருங்க. தற்போது 2 ஆயிரம் தனிமை படுக்கைகள் உள்ளன. விரைவில் 10 ஆயிரம் தனிமை படுக்கைகள் சேர்க்கப்படும். அனைவருக்கும் தேவையான தானியங்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் உள்ளன. அதனால் பதுக்க வேண்டிய அவசியமில்லை. கள்ள சந்தை மற்றும் பதுக்கலுக்கு எதிராக செயல்படும்படி வர்த்தகர்களிடம் முறையிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.