மேலாடையில் ராமரை குறிக்கும் சொல்: பிரபல நடிகைக்கு எதிர்ப்பு!

  0
  5
  வாணிகபூர்

  இவர் சமீபத்தில் நடித்திருந்த ‘வார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

  பாலிவுட் நடிகை வாணிகபூர் தமிழில் ஆஹா கல்யாணம் படத்தில் நடித்து கவனத்தை பெற்றவர். இவர் சமீபத்தில் நடித்திருந்த ‘வார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

  vaani

  அவ்வப்போது  சமூகவலைதளங்களில்  தனது கவர்ச்சி புகைப்படத்தை  பதிவிட்டு வரும்  வாணி கபூர் சமீபத்தில் சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

  vaani

  அதாவது அவர் அணிந்துள்ள மேலாடையில் கடவுள் ராமரை குறிக்கும், ராம் என்ற சொல் முழுவதுமாக அச்சிடப்பட்டுள்ளது. இதைக் கண்ட நெட்டிசன்கள், இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக புகைப்படம் உள்ளது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

  இதையடுத்து வாணி கபூர்  இஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்ட படத்தை டெலிட் செய்துவிட்டார். ஆனால் பேஸ்புக் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தை அவர் இன்னும் நீக்கவில்லை.