மேற்கு வங்கத்துக்கு வரக்கூடிய எல்லா விமானங்களையும் உடனே நிறுத்துங்க….. பிரதமருக்கு மம்தா கடிதம்…

  0
  1
  மம்தா பானர்ஜி

  மேற்கு வங்கத்துக்கு வரக்கூடிய எல்லா விமானங்களையும் உடனடியாக நிறுத்துங்க என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  நம் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415ஐ தாண்டி விட்டது. மேலும் இந்த தொற்று நோய்க்கு இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு வங்கத்தில் மட்டும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  விமானங்கள்

  கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதுமாக 82 மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் கேரளா, மகாராஷ்டிரா உள்பட சில மாநிலங்கள் முழுமையாக ஊரடங்கை அறிவித்துள்ளன. மேற்கு வங்கமும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கப பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  பிரதமர் மோடி

  இந்நிலையில் மேற்கு வங்கத்துக்கு வரும் அனைத்து விமானங்களையும் உடனடியாக நிறுத்தும்படி பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து மேற்கு வங்கத்துக்கு வரும் நபர்களால் கொரோனா வைரஸ் அம்மாநிலத்தில் மேலும் பரவிக் கூடாது என்ற எண்ணத்தில் மம்தா பானர்ஜி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்