மேட்டுப்பாளையம்- உதகை ரயில்கள் ரத்து..!

  0
  4
  Train

  தமிழகத்தில் பருவ மழை துவங்கியதன்  முதல் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.

  தமிழகத்தில் பருவ மழை துவங்கியதன்  முதல் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இன்னும் மூன்று நாட்களுக்குக் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை ரயில்கள் மலைப் பாதை வழியே செல்கிறது. மேட்டுப்பாளையம், கல்லார் பகுதியில் கன மழை பெய்து வருவதால், கல்லார் – ஹில்கிரோ ரயில்நிலையம் அருகே மண் சரிவு ஏற்பட்டு ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், கடந்த 18 முதல் 20 ஆம் தேதி வரை அப்பகுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 

  Train

  அதனையடுத்து, இன்னும் அப்பகுதியில் கன மழை பெய்து கொண்டே தான் இருக்கிறது. ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், நிற்காமல் பெய்யும் கன மழை காரணமாக மீண்டும் மண் சரிவு ஏற்படும் என்பதால் மேட்டுப்பாளையம்- உதகை ரயில்கள் இன்று முதல் நாளை மறுநாள் ( 22, 23, 24)  வரை நிறுத்தப்படுகின்றன என்றும் மலைப்பாதை ரயில்களுக்கான முன்பதிவுகளும் மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.