“மேட்ச் ஃபிக்சிங்” சூதாட்டத்தில்.. ஒரு பிரபலம் உட்பட 2 கிரிக்கெட் வீரர்கள் கைது!

  0
  3
  மேட்ச் ஃபிக்சிங்

  கர்நாடகா பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் உட்பட 2 பேர் பெங்களூரு குற்றப்பிரிவு போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

  கர்நாடகா பிரீமியர் லீக் டி20 தொடர் கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்ககி தற்போது வரை 8 சீசன்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற தொடரின் நடுவே சூதாட்டங்கள் நடைபெற்று வருவதாக பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவிற்கு புகார் வந்தது. 

  match

  இதனையடுத்து நடந்த சோதனையில், அணி உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என சிலர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

  இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிப் போட்டி பெல்லாரி டெஸ்ட் மற்றும் ஹுப்ளி டைகர்ஸ் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. இப்போட்டியில் பெல்லாரி அணியை வீழ்த்தி ஹுப்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.  இப்போட்டியில் பெல்லாரி அணியின் கேப்டன் சிஎம் கௌதம் மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 37 பந்துகளில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

  இவரின் ஆட்டத்தில் வழக்கமான போக்கு இல்லாததால், தோல்விக்கு காரணமாக கருதப்பட்டார். மேலும் அணி நிர்வாகம் சந்தேகப்பட்டு,  சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுப்பியது. இந்த புகாரை பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.

  players

  விசாரணையில், கர்நாடாக பிரீமியர் லீக் தொடரில் “மேட்ச் பிக்சிங்” எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானதால், பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் சிஎம் கௌதம் மற்றும் அபர் காசி ஆகிய இரு வீரர்களையும் பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

  சிஎம் கவுதம் ஐபிஎல் தொடரில் பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற முன்னணி அணிகளுக்கு ஆடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.