மெது பக்கோடா செய்யலாம் வாங்க

  0
  2
  மெது பக்கோடா

  மாலை நேரத்தில் சூடான டீ அலல்து காப்பியுடன் சாப்பிட அருமையான ஒன்று என்றால் அது மெது பக்கோடா தான்.மெது பக்கோடாவை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க. 

  மாலை நேரத்தில் சூடான டீ அலல்து காப்பியுடன் சாப்பிட அருமையான ஒன்று என்றால் அது மெது பக்கோடா தான். மெது பக்கோடாவை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க. 

  தேவையான பொருட்கள்:

  medhu pakoda

  கடலை மாவு : 1 கிலோ

  அரிசி மாவு : 1/2 கப் 

  இஞ்சி : 1

  பச்சைமிளகாய் : 6

  வெள்ளை ரவை : 2 டீஸ்பூன் 

  சோடா உப்பு : 1 சிட்டிகை 

  உப்பு,எண்ணெய் : தேவையானது

  எப்படி செய்வது: 

  medhu pakoda

  கடலை மாவு, அரசி மாவு, வெள்ளை ரவை, சோடா உப்புச் சேர்த்து கிளறி, உப்புக் கரைத்த நீரைச் சேர்த்து கெட்டியாக மாவாகப் பிசையவும். இதில் சிறிதாக அரிந்த பச்சை மிளகாய், இஞ்சி, கிள்ளிப் போட்ட கருவேப்பில்லை சேர்த்து பிசையவும். இரண்டு குழிக்கரண்டி எண்ணெய் காயவைத்து இந்த மாவில் ஊற்றி கெட்டியாக பிசையவும். எண்ணெய் காய்ந்த பின் பக்கோடா உருண்டை போட்டு எடுக்கவும்.