மூன்று நண்பர்களுக்கு இடையே நாரதர் வேலை பார்த்த வனிதா!?

  0
  4
  வனிதா

  பிக் பாஸ் 3யின் இன்றைக்கான கடைசி புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

  சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான கடைசி புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் வீட்டிற்குள் எப்போதும் ஒன்றாகச் சுற்றித் திரிபவர்கள் அபி, ஷெரின் மற்றும் சாக்ஷி. வந்த நாள் முதல் கூட்டு சேர்ந்து இவர்கள் செய்யும் அராஜகத்துக்கு அளவே இல்லாமல் செல்கிறது. இவர்கள் செய்வதைப் பார்த்து கடுப்பான ரசிகர்கள் இவர்கள் எப்போது, பிரிவார்கள் என்று காத்து இருந்தனர். 

  இந்த நிலையில் இன்றைக்கான கடைசி புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் எப்போதும் போல் வனிதா அவர்களிடம் சென்று அபியை பற்றி triggger செய்கிறார். இதனால் வருத்தமடைந்த சாக்ஷி, ‘நான் அவளுக்காக எப்பவும் கூட இருக்கேன், அவ ஏன் இப்படி பன்றா’ என்று அழுத்துகொண்டே பேசிக்கிறார். 

  இதற்கிடையில் வந்த அபி, ‘இங்க என்ன பிளான் பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்க, ஷெரின் ஒருத்தர் மேல் நம்பிக்கை வைத்தால் முழுமையாக வைக்க வேண்டும் ‘ என்கிறார். இதனால் கடுப்பான அபி அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்வது போல் புரோமவில் காட்டப்பட்டுள்ளது. எது எப்படியோ நல்ல இருந்த நண்பர்கள் கூட்டத்தில் வனிதா வந்து நாரதர்  வேலையை பார்த்துட்டு போய்ட்டாங்க…