மூன்றாம் பாலின மக்களுக்கு அமைக்கப்பட்ட உலகின் முதல் பள்ளி!! எந்த நாட்டில் தெரியுமா?

  15
  திருநங்கை

  மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு உலகில் முதன் முதலாக பிரத்தியேகமான பள்ளி ஒன்றினை அமைத்துள்ளது சிலி நாடு.

  மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு உலகில் முதன் முதலாக பிரத்தியேகமான பள்ளி ஒன்றினை அமைத்துள்ளது சிலி நாடு.

  உலகில் பல்வேறு பக்கங்களில் இருந்தும் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு  ஆதரவு அதிகரித்து வருவதால், பலரும் தங்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெளிக்காட்டி வருகின்றனர். 

  trans

  திருநங்கைகளில் பலர் சினிமா, விளையாட்டு போன்ற துறைகளில் சாதித்து வருகின்றனர். சிலர் நன்கு படித்து காவல்துறை பணிகளுக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பெருமை சேர்க்கின்றனர்.  மற்றும் பலர் உயர்கல்வி படித்து பட்டம் பெற்று முனைவர் பட்டமும் பெற்று வருகின்றனர். 

  trrans

  இப்படி இருக்க, மேலும் பலரோ பயிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றில், பணிபுரியும் அலுவலகங்களில், போது இடங்களில் என பல அவமானங்களையும் சந்திக்க நேரிடுகிறது. இதனால், பல திருநங்கைகள் விரக்தியின் உச்சத்திற்கு சென்று தற்கொலை செய்து கொள்வதையும் நாம் இன்றளவும் செய்திகள் வாயிலாக பார்க்க நேரிடுகிறது.

  trans

  உலகில் முதல் முறையாக மூன்றாம் பாலின மாணர்வர்களுக்கு என்றே பிரத்தியேகமாக பள்ளி ஒன்றை நிறுவி, அதில் இப்படி உடல் ரீதியாக மாற்றம் கொண்டுள்ள மாணவர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது சிலி அரசு.

  இதன் மூலம், மூன்றாம் பாலினத்தவர்கள், மற்ற மாணவர்கள் அவமானம் செய்வார்கள் என்ற கவலை இன்றி நிம்மதியாக படித்து பயன்பெறலாம் என சிலி அரசு தெரிவித்துள்ளது.

  chile

  சிலி அரசின் இம்முயற்சிக்கு ஐ.நா. பாராட்டு தெரிவித்தது. அதேபோல், பல நாடுகளில் இருந்தும் இதற்கு பாராட்டு மற்றும் நிதியுதவி குவிந்த வண்ணம் உள்ளன.