மூன்றாம் நாள் ஆட்டம்: பந்தே பிடிக்காமல் டிக்ளேர் செய்தது இந்திய அணி!

  0
  6
  Match

  வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 என இருந்த இந்திய அணி, 3ம் நாளில் பந்தே பிடிக்காமல் டிக்ளேர் செய்தது.

  வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 என இருந்த இந்திய அணி, 3ம் நாளில் பந்தே பிடிக்காமல் டிக்ளேர் செய்தது.

  இந்தியா மற்றும் வங்கதேசம் இரு அணிகளும் மோதி வரும் இந்தூர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வந்த இந்திய அணிக்கு இரண்டாம் நாளில் புஜாரா மற்றும் ரகானே இருவரும் அரைசதம் கண்டனர். இவர்களுடன் ஜோடி சேர்ந்த ஆடிவந்த துவக்க வீரர் மயங்க் அகர்வால் டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்து புதிய சாதனை படைத்தார். 

  match

  அகர்வால் ஆட்டமிழந்த பிறகு, தொடர்ந்து ஆடி வந்த ஜடேஜா இரண்டாம் நாள் முடிவில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் 500 முதல் 550 ரன்கள் வரை எடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. 

  match

  ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஒரு பந்து கூட பிடிக்காமல், போட்டி துவங்கும் சில நிமிடங்களுக்கு முன்பாக திடீரென கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தார். தற்போது வங்கதேசத்தை விட இந்திய அணி 343 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

  இன்னும் சிறிது நேரத்தில் வங்கதேச வீரர்கள் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்க இருக்கின்றனர்.

  match

  போட்டியின் முதல்நாள் ஆட்டத்தை பார்க்கையில்..

  முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. துவக்கம் முதலே வங்கதேச வீரர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி திணறடித்தனர். இதனால் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 150 ரன்களுக்கு சுருண்டது. 

  இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ரோகித்சர்மா ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர் முதல்நாள் இறுதி வரை நிலைத்து ஆடி மயங்க் அகர்வால் மற்றும் புஜாரா இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்ததால், இறுதியாக 86 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து இருந்தது இந்திய அணி.