மூட நம்பிக்கையை வளர்க்கும் மோடி! – கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

  0
  1
  karthi-chidambaram

  சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டை கலெக்டரை சந்திக்க வந்த அவர் பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “கொரோனா இக்கட்டு உள்ள இந்த நேரத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது

  மூட நம்பிக்கையை வளர்க்கும் விதமாக மோடி பேசி வருகிறார் என்று ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யுமான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
  சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டை கலெக்டரை சந்திக்க வந்த அவர் பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “கொரோனா இக்கட்டு உள்ள இந்த நேரத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது, பரிசோதனை மேற்கொள்வது பற்றி பிரதமர் மோடி பேசாமல், மூட நம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் 5ம் தேதி விளக்குகளை அணைத்துவிட்து, தீபம், மெழுகுவர்த்தி ஏற்றச் சொல்கிறார்.

  modi-speech

  பொருளாதார உதவிகளை அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் மோடியின் பேச்சு என் தந்தையைப் போல் எனக்கும் ஏமாற்றத்தை அளிக்கிறது. கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தன்னால் முடிந்த அளவுக்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” என்றார்.