மு.க ஸ்டாலின் வேணும்னா நித்தியை போலத் தனித்தீவு வாங்கிக்கட்டும் : அமைச்சர் ஜெயக்குமார்

  10
  Nithyananda

  உள்ளாட்சித் தேர்தலுக்கு வரவேற்பு தெரிவிப்பதாகச் சொல்லிவிட்டு பிறகு உச்சநீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்குப் பதிவு செய்தது ஏன்

  சென்னை பாரிமுனையில் உள்ள மூதறிஞர் ராஜாஜியின் உருவப்படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் சிறுபான்மையினருக்குப் பாதிப்பு ஏற்படாது என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று தெரிவித்தார். 

  ttn

  அதனைத் தொடர்ந்து , உள்ளாட்சித் தேர்தலுக்கு வரவேற்பு தெரிவிப்பதாகச் சொல்லிவிட்டு பிறகு உச்சநீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்குப் பதிவு செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். தற்போது நித்தியானந்தா பற்றிய செய்திகள் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அதனைக் குறிப்பிட்டு, முதலமைச்சர் ஆகிவிடுவோம் என்று மு.க ஸ்டாலின் போன்று கனவில் இருப்பவர்கள் நித்தியானந்தாவைப் போல ஈக்வடார் போய் தனித்தீவு வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.