மு.க.ஸ்டாலின் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

  0
  2
  மு.க.ஸ்டாலின்-கதிர் ஆனந்த்

  ஆம்பூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுடன்  நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்

  வேலூர்: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  vellore

  ஆம்பூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுடன்  நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். மேலும் கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபத்திற்கு வட்டாட்சியர் சுஜாதா தலைமையில் சீல் வைத்தனர். 

  vellore

  இதுகுறித்து  வட்டாட்சியர் சுஜாதா ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த், மண்டப உரிமையாளர் ஜக்கரியா, சுன்னத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.