மு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்! துக்ளக் குருமூர்த்தி!

  8
  mk stalin

  சமீப காலங்களாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஸ்டாலினின் மிசா கைது பற்றிய சர்ச்சைகள் அதிகளவில் கடும் விவாதத்திற்குள்ளாகியது.

  சமீப காலங்களாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஸ்டாலினின் மிசா கைது பற்றிய சர்ச்சைகள் அதிகளவில் கடும் விவாதத்திற்குள்ளாகியது. மிசா ஸ்டாலின் என்று மீம்ஸ்களை ஒரு பக்கம் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் உருவாக்கி, ஸ்டாலினின் மிசா கைது பற்றி கிண்டலைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஸ்டாலின் மீது சுமத்தப்பட்ட மிசா கைது பற்றிய சர்ச்சைக்கு, துக்ளக் குருமூர்த்தி முற்றுப்புள்ளி வைப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

  துக்ளக் குருமூர்த்தி

  ஆரம்பத்தில் ஆதாரமில்லாத செய்தியாக வலம் வந்த ஸ்டாலினின் மிசா கைது பற்றிய செய்தி, அமைச்சர் பாண்டியராஜன் போகிற போக்கில், இந்தத் தகவலைப் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதும் வைரலாகி தொடர்ந்து ஸ்டாலினின் மிசா கைதின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி ட்ரெண்டானது. அமைச்சருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை திமுகவினர் நடத்தினாலும் மிசா கைது குறித்து எந்தவொரு ஆதாரத்தையும் திமுகவினர் முன்வைக்கவில்லை.  

  mk stalin

  இந்நிலையில் துக்ளக் பத்திரிகைகள் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் குருமூர்த்தி, “ஸ்டாலின் மிசா கைதியாக சிறையில் இருந்தது உண்மை. அது எனக்கே தெரியும். அவசர காலம் முடிந்து நடந்த 1977 தேர்தலில், அவருடன் இணைந்து முரசொலி மாறனுக்கு நான் பிரச்சாரம் கூட செய்திருக்கிறேன். எனவே அவர் மிசா ஸ்டாலின் தான்” என்று சொல்லி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.