மு.க.ஸ்டாலினுடன் ரகசிய தொடர்பு… உளவுத்துறையை ஏவி விட்ட எடப்பாடி பழனிசாமி..!

  0
  6
  எடப்பாடி பழனிசாமி

  தி.மு.க., தரப்பை யாராவது தொடர்பு கொள்கிறார்களா? என அதிகாரிகள் வட்டாரத்தை, கண்காணிக்கும்படி உளவுத்துறைக்கு உத்தரவிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

  தி.மு.க., தரப்பை யாராவது தொடர்பு கொள்கிறார்களா? என அதிகாரிகள் வட்டாரத்தை, கண்காணிக்கும்படி உளவுத்துறைக்கு உத்தரவிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.stalin

  ஓட்டு எண்ணிக்கையில் கோட்டை விட்டுடக் கூடாது என தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியின் பூத் ஏஜன்டுகளையும் கூப்பிட்டு, ஓட்டு எண்ணும்போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என சிறப்பு பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.

  இதனால் அவர்களை நான்கு தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு கூட அனுப்பவில்லை. ஏஜன்டுகளின் கைச்செலவுக்கும், அந்தந்த மாவட்டச் செயலர்கள் மூலமாக கணிசமான தொகையை கொடுத்திருக்கிறார்கள்.ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், ஏஜன்டுகளுக்கு தனியாக விருந்து வைக்க திட்டமிட்டுள்ளார்கள். இதனால், அவர்கள் ஏக குஷியாக இருக்கிறார்கள்.stalin

  வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும். ஜூன், 3ம் தேதி, கருணாநிதி பிறந்த நாளன்று, முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்பார் என தி.மு.க.,வினர் நம்பிக்கையோடு பேசி வருகிறார்கள்.

  இது தமிழக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், இப்போதே தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகளை பார்த்து, ‘பசை’யான பதவிகளை பிடிக்க, துண்டு போடலாமா? அல்லது தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்கலாமா என குழப்பத்தில் உள்ளனர்.

  eps

  இதற்கு இடையில், தி.மு.க., தரப்பை யாராவது தொடர்பு கொள்கிறார்களா? என அதிகாரிகள் வட்டாரத்தை, கண்காணிக்கும்படி உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.