மு.க.ஸ்டாலினுக்கு இது… உதயநிதிக்கு அது… வீக்னஸ் பார்த்து கச்சிதமாக காரியம் சாதித்த விஐபி..!..!

  0
  2
  ஸ்டாலின்

  ஏனென்றால் அந்தத் தொகுதியில் 50 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ய ஆளும் தரப்பும், மாவட்ட பெண் அமைச்சரும் தயாராக இருக்கிறார்கள்.

  விக்கிரவாண்டி தொகுதியில்  சீட் வாங்க  தி.மு.க., தரப்பில்  விழுப்புரம் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, துணைச் செயலர் ஜெயச்சந்திரன் இடையே கடும் போட்டி நடந்தது. புகழேந்தி, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தீவிர ஆதரவாளர். அதனால், புகழேந்திக்கு விட்டுக் கொடுத்தே ஆக வேண்டும் என ஜெயச்சந்திரனிடம் பொன்முடி கறாராக சொல்ல, வேற வழியில்லாமல் அவரும் பின் வாங்கி விட்டார்.

  udhaya

  இதற்கு இடையில்  தனது மகன் கவுதம சிகாமணியை விட்டு, உதயநிதி போட்டியிட மனு கொடுக்க வைத்து இருந்தார். இதைப் பார்த்து உதயநிதி உருகி விட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக வேட்பாளர் நேர்காணலுக்கு முன் ஸ்டாலினை பார்த்து  ‘முரசொலி’ சந்தா என சுளையாக 55 லட்சம் ரூபாயை பொன்முடி கொடுத்திருக்கிறார். 

  stalin

  இப்படி அப்பா ஸ்டாலினுக்கும், மகன் உதயநிதிக்கும் சேர்த்து, ஐஸ் வைத்து தன் ஆதரவாளருக்கு, சீட் வாங்கி விட்டார் பொன்முடி. 

  இது ஒருபுறமிருக்க, இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு  முன்பு வரை நாங்குநேரி தொகுதியில், நாமே போட்டியிட வேண்டும் என  தி.மு.க., தரப்பினர் அடம் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். உதயநிதி கூட, உடும்பு பிடியாக இருந்தார்.

  stalin

  ஆனால், தேர்தல் அறிவித்ததும் தொகுதியை, காங்கிரசுக்கு ஸ்டாலின் தள்ளி விட்டுவிட்டார். ஏனென்றால் அந்தத் தொகுதியில் 50 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ய ஆளும் தரப்பும், மாவட்ட பெண் அமைச்சரும் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு போட்டியாக நாம் செலவு செய்தாலும், ஆட்சியில் எந்த மாற்றமும் வரப் போறதில்லை என ஸ்டாலின் நினைத்திருக்கிறார். அதனால் தான், காங்கிரஸ் கேட்டதும் கொடுத்து விட்டார்.