மு.க.ஸ்டாலினுக்காக நடந்த அராஜாகம்..? மிரள வைக்கும் ஃப்ளாஷ்பேக்..!

  0
  5
  ஸ்டாலின்

  அந்த அதிகாரி நியமனம் கூட திட்டமிட்டே இதே செத்துப்போன கருணாநிதி மூலம் தேர்தலுக்காகவே கொண்டு வரப்பட்டார் என்பது கூடுதல் தகவல்.

  மு.க.ஸ்டாலினை சென்னை மாநகராட்சிக்கு மேயர் என்கிற புதிய பதவியை உருவாக்கி அதிலே உட்கார வைக்க உள்ளாட்சி தேர்தலில் நடந்த கொடுமை மிக மோசமானது என பாஜக நிர்வாகி முருகானந்தம் தெரிவித்துள்ளார்.  

  இது குறித்து அவர், ‘’தொண்டர்கள் உழைப்பார்கள் இவர்களின் குடும்ப வாரிசுகள் பதவி சுகத்தை அனுபவிப்பார்கள் நோகாமல் சிணுங்காமல் ஹாயாக கட்சி பொறுப்பிற்கு திணிக்கப்படுவார்கள். இவர்கள் கட்சியில் ஒரு பெண் கூட தலைமைக்கு வரமுடியாது. அப்படி ஒரு நிலைமை வந்தால், அதிலும் கூட துர்கா ஸ்டாலினைத்தான் முன்னிறுத்துவார்கள்.  MK Stalin

  அப்படிப்பட்ட கட்சிக்கு இதே ஸ்டாலினை சென்னை மாநகராட்சிக்கு மேயர் என்கிற புதிய பதவியை உருவாக்கி அதிலே ஸ்டாலினை அமர்த்தி அழகு பார்த்தார் இறந்துபோன கருணாநிதி. அவரால் அன்றைய ஆட்சியில் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் கொடுமையானது மிக மோசமானது. தேர்தல் அதிகாரியை வீட்டுக்கு செல்லும்படி உத்தரவிட்டுவிட்டு அடியாட்களை கொண்டு எதிர்கட்சியினரை விரட்டிவிட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

  வழக்கில் அன்றைய தேர்தல் அதிகாரி சந்திரசேகர் சொன்னார். தொலைபேசி அழைப்பு வந்த சமயம் நான் பாத்ரூமில் இருந்தேன் என்று கூசாமல் சொல்லி நீதிபதியின் கண்டனத்தை எதிர்நோக்கினார். அந்த அதிகாரி நியமனம் கூட திட்டமிட்டே இதே செத்துப்போன கருணாநிதி மூலம் தேர்தலுக்காகவே கொண்டு வரப்பட்டார் என்பது கூடுதல் தகவல்.

  M K Stalin

   கோர்ட்டில் எதிர்க்கட்சி வழக்குரைஞர் வாதத்தில் ’’திமுக ஒரு அராஜக பேர்வழி நபர்களின் கட்சி’’ என்றார். உள்ளாட்சி தேர்தல் என்பது உள்ளூர் அமைப்பினை போன்றது. நமது தேவையை நாம் நமது உள்ளூரிலேயே தேர்ந்தெடுக்கப்படும் நபரை கொண்டு வெகு விரைவாக செய்துகொள்ளலாம். அதானல் திமுக போன்ற கட்சியை மக்கள் அறவே ஒதுக்கவேண்டும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். திமுக நிலங்களை அபகரிக்கும் கட்சி. சொத்துக்களை கட்டப்பஞ்சாயத்து மூலம் அடாவடியாக பிடுங்கிக்கொள்ளும் கட்சி. எவ்வளவளோ உதாரணங்கள் உள்ளன. 

  பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளம். அதனால் ஸ்டாலினை தோற்கடிப்பது என்பது நமது தேசீய கடமை. திமுகவை இல்லாமல் செய்வது நமது பிறப்பின் கடமை’’ என்கிறார்.