முழுசா ஜெயலலிதாவாக மாறிய கங்கனாவை பாருங்க!

  0
  1
  கங்கனா

  தலைவி என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில்  ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

  லாஸ் ஏஞ்சல்ஸ்: தலைவி படத்திற்காக ஜெயலலிதா போல உருவத்தை மாற்றுவதற்கான லுக் டெஸ்ட்டில் ஈடுபட்ட நடிகை கங்கனா ரணாவத் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

  kanagana

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாற்றை பலரும் படமாக எடுக்க முனைப்பு காட்டி வந்த நிலையில்  இயக்குநர் விஜய் அதனைச் செயல்படுத்தி வருகிறார்.  தலைவி என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில்  ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. 

  kangana

  இந்நிலையில் தலைவி படக்குழு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளது. காரணம் ஜெயலலிதா போல உருவத்தை மாற்றுவதற்கான லுக் டெஸ்ட்  அங்கு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

  இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கங்கனாவின் சகோதரி ரங்கோலி, உருவத்தை மாற்றுவதற்கான மேக் அப் செய்கிறார். ஒரு நடிகைக்கு இது எளிதானது அல்ல. இதைப் பார்ப்பதற்கே எங்களுக்குச் சங்கடமாக இருந்தது.ஆனாலும் அவர் அமைதியாக இருந்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.