முள்ளும் மலரும் படத்தில் ரஜினிக்குப் பதில் நடிப்பதாக இருந்தது நான்தான்-கண்ணீருடன் கமல் சொல்லும் ஒரு ஃப்ளாஷ்பேக்

  0
  1
  rajinikanth kamala hassan

  ’முள்ளும் மலரும்’ தயாராவதற்கு முன் தமிழ்ப் படங்கள் அதிகமாகச் செய்ய ஆர்வமில்லாமல் இருந்த பாலு மகேந்திராவையும் மகேந்திரனையும் என்னுடைய வீட்டில் சந்திக்க வைத்தது இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இரண்டு பேர் கையையும் சேர்த்துவைத்து, ‘வெற்றிப் படங்கள் எடுங்கள்’ என்று சொன்னேன். அதுபோலவே அவர்கள் செய்தார்கள். அது எனக்குக்கிடைத்த பெருமை

  மறைந்த இயக்குநர் மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’ படம் குறித்து இதுவரை இயக்குநர் மகேந்திரன் உட்பட யாருமே வெளியிடாத ஒரு ஷாக் சீக்ரெட் ஒன்றை அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியபோது  நடிகர் கமல் வெளியிட்டார்.

  kamal
   
  இன்று காலை 11 மணியளவில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இயக்குநரின் இல்லம் வந்த கமல், அவருக்கு மலர் வளையம் வைத்துவிட்டு, பேட்டி போலில்லாமல் சில பழைய சம்பவங்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்துகொண்ட கமல்,’’மகேந்திரனுடன் வெகுநாள் நட்பு எனக்குண்டு. படங்கள் நாங்கள் குறைவாகச் செய்திருந்தாலும், நட்பு வலுவாகவே இருந்தது. பக்கத்து ஊர்க்காரர். திறமையான மனிதர்களில் ஒருவர் என நான் வியந்தவர்.
   
  ‘தங்கப்பதக்கம்’ காலத்திலிருந்தே அவரைத் தெரியும். பிறகு கூடி பல படங்கள் செய்திருக்கிறோம். ரஜினி தேர்வாவதற்கு முன்பு  முதலில் ‘முள்ளும் மலரும்’ படத்தில்தான் நான் நடிப்பதாக இருந்தது. எனக்கு அந்த அதிர்ஷ்டம் வாய்க்காத நிலையில் அடுத்துதான் ரஜினி அப்படத்துக்குள் வந்தார்.

  mullum malarum
   
  ’முள்ளும் மலரும்’ தயாராவதற்கு முன் தமிழ்ப் படங்கள் அதிகமாகச் செய்ய ஆர்வமில்லாமல் இருந்த பாலு மகேந்திராவையும் மகேந்திரனையும் என்னுடைய வீட்டில் சந்திக்க வைத்தது இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இரண்டு பேர் கையையும் சேர்த்துவைத்து, ‘வெற்றிப் படங்கள் எடுங்கள்’ என்று சொன்னேன். அதுபோலவே அவர்கள் செய்தார்கள். அது எனக்குக்கிடைத்த பெருமை.
   
  அந்தப் படத்துக்கு கிட்டத்தட்ட புரொடக்‌ஷன் மேனேஜர் மாதிரி எல்லாம் வேலை பார்த்துள்ளேன். ஏனென்றால், படம் அற்புதமான படம் என்று எனக்குத் தெரியும். எந்தவொரு காரணத்தைக் கொண்டும் நின்றுவிடக்கூடாது என்று நாங்கள் அனைவரும் சேர்த்து வெளிக்கொண்டு வந்த படம்தான் ‘முள்ளும் மலரும்’. அதற்குப் பிறகு பல அற்புதமான படங்களைக் கொடுத்துள்ளார் மகேந்திரன்.

  rajini
   
  அவரைப் பார்த்து, சினிமா எடுக்க வேண்டும் என்று ஒரு இளைஞர் கூட்டமே வந்தது என்று சொன்னால் மிகையாகாது. அவரது முடிவு,  வாழ்வில் ஒரு உச்சத்தைத் தொட்ட பிறகுதான் ஏற்பட்டு இருக்கிறது என்பதில் சந்தோஷம். பல திறமைசாலிகள் திறமை வெளிவராமலேயே சென்றதைப் பார்த்திருக்கிறேன். இவருடைய நினைவுகள் தமிழ் சினிமாவில் என்றும் தாங்கி நிற்கும்” என்று தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் கமல். 

  இதையும் படிங்க: இயக்குநர் மகேந்திரன்: வாழ்வின் சில உதிரிப்பூக்கள்