முரசொலி மூலப்பத்திரம் எங்கே..? சர்வதேச பிரச்னையாக்கிய பாஜக..!

  5
  ஸ்டாலின்

  ‘முரசொலி மூலப்பத்திரம் எங்கே’ என பதாகையுடன், தனிநபராக போராட்டம் நடத்திவிட்டு வந்து இருக்கிறார். முரசொலி விவகாரத்தை, சர்வதேச பிரச்னையாக்கி விட்டார்கள்.

  சென்னையில் உள்ள திமுக முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கொளுத்தி போட்டார். 

  இதையடுத்து, பா.ஜ.,வும், அந்த விவகாரத்தை ஊதி பெரிதாக்கி கொண்டு இருக்கிறது. மறுபக்கம், தி.மு.க.,வும், பதிலடி கொடுத்து வருகிறது. வழக்கு, ‘நோட்டீஸ்’ என, விவகாரம் அவ்வப்போது கிளம்பி வருகிறது. நேற்றோடு இந்த விவகாரம் 50 நாட்களை கடந்து விட்டது.

  M K Stalin

  இந்நிலையில், பா.ஜ.க,வைச் சேர்ந்த மதுரை இளைஞரணி கோட்ட பொறுப்பாளர் சங்கர்பாண்டி, ஜெர்மனிக்கு போய் போராட்டம் நடத்தியிருக்கார். சர்வதேச பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்துகிற இடமான, ஜெர்மனியின், கோலன் நகரில் ‘முரசொலி மூலப்பத்திரம் எங்கே’ என பதாகையுடன், தனிநபராக போராட்டம் நடத்திவிட்டு வந்து இருக்கிறார். முரசொலி விவகாரத்தை, சர்வதேச பிரச்னையாக்கி விட்டார்கள்.