முரசொலி அச்சிட்டுக் கொடுத்த துக்ளக்! ரஜினிக்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

  0
  7
  rajinikanth

  எமெர்ஜென்சி காலத்தில் முரசொலி அச்சகத்தில் துக்ளக் பத்திரிகை அச்சானது தெரியுமா என்று ரஜினிகாந்தை டேக் செய்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

  எமெர்ஜென்சி காலத்தில் முரசொலி அச்சகத்தில் துக்ளக் பத்திரிகை அச்சானது தெரியுமா என்று ரஜினிகாந்தை டேக் செய்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  rajini

  துக்ளக் 50வது ஆண்டு நிறைவு விழாவில் முரசொலி பத்திரிகை வைத்திருந்தால் அவர் தி.முக என்று கூறிவிடலாம். ஆனால், துக்ளக் பத்திரிகை வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. துக்ளக் பத்திரிகை வைத்திருப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் என்று கூறிச் சென்றிருந்தால் கூட இந்த அளவுக்கு எதிர்ப்பு வந்திருக்காது… அது அவர் கருத்து என்று விட்டிருப்பார்கள். ஆனால், தேவையில்லாமல் முரசொலியை இழுத்ததுதான் பரபரப்புக்கு காரணமாகிவிட்டது.

  rajini

  இந்த நிலையில் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட பல சமூக ஊடக பக்கங்களில் கடந்த கால வரலாறு என்று பல பதிவுகள் பரவி வருகின்றன. காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் சோவின் நாடகத்துக்கு சபா உரிமையாளர் அழைப்புவிடுத்துள்ளார். முதல்வருக்கு அழைப்புவிடுத்தது சோவுக்கு தெரியாது. அப்போது நாடகத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசைப் பற்றி விமர்சித்து சோ கிண்டலடித்துள்ளார். இதனால், காமராஜர் கொந்தளித்தாராம். இவ்வளவு தப்பாக நாடகம் நடத்த யார் லைசன்ஸ் கொடுத்தது என்று காமராஜர் கேட்க, உங்க ஆளுங்கதான், என்ன ஏதுன்னுகூட பார்க்காம கொடுத்துவிட்டார்கள் என்று சோ சொல்லியிருக்கிறார். அதற்கு காமராஜர், கார் ஓட்ட லைசன்ஸ் கொடுத்தால் சாலையில் பாதுகாப்பாக ஓட்டத்தான் அனுமதி. லைசன்ஸ் வாங்கிவிட்டேன் என்பதற்காக மற்றவர்கள் மீது இடிப்பதற்காக இல்லை” என்று பதிலடி கொடுத்துவிட்டு வெளியேறினாராம்.

  kamaraj

  இதன்பிறகு தந்தையின் வற்புறுத்தல் காரணமாக காமராஜர் இல்லம் சென்று மன்னிப்பு கேட்டதும், அதை அப்போதே மறந்துவிட்டதாக சோவை காமராஜர் வாழ்த்தியதும் வரலாறு… இதுவே அவர் பத்திரிகை தொடங்க காரணங்களுள் ஒன்று என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

  சிலர், துக்ளக் வரலாற்றை வெளியிட்டுள்ளனர். 1970ம் ஆண்டு துக்ளக் பத்திரிகையை ஆனந்த விகடன் இதழ்தான் அச்சடித்துக் கொடுத்தது. துக்ளக் பத்திரிகைக்கான மறைமுக உதவிகளை ஆனந்த விகடன் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன் செய்தார். நெருக்கடி காலகட்டத்தில் பேப்பர் கோட்டா பிரச்னை காரணமாக ஆனந்த விகடனால் அச்சிட முடியவில்லை. அவசர நிலைக்கு துக்ளக் எதிர்ப்பு என்பதால் சோவுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. எக்ஸ்பிரஸ் கோயங்கா முன்வந்தார்… உடனடியாக அங்கு மத்திய அரசு அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் தடையை ஏற்படுத்தினர்.

  express

  இதனால், துக்ளக் இதழ் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதைக் கேள்விப்பட்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி, “சோ துணிச்சல்காரர். அவர் மாதிரியான படைப்பாளிகளின் படைப்புகள் நிற்கக் கூடாது. கஷ்டப்பட விடக்கூடாது. அவருக்கு சம்மதம்னா, முரசொலி அச்சகத்தில் அடிச்சிக் கொடுங்க” என்று கூறினாராம். முரசொலி அச்சகத்தில் அச்சிட்டது மட்டுமின்றி அதற்கு ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கவில்லையாம். இப்படி நெருக்கடி நிலை முடியும் வரை முரசொலியில்தான் துக்ளக் அச்சானதாம். ரஜினிக்கு இது தெரியவும் வாய்ப்பில்லை. இதை சொல்லி கொடுக்கவும் அவர் அருகில் யாரும் இல்லை. கலைஞர் வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல… பெரியார் மற்றும் அண்ணாவின் பிம்பம்! வரலாறு தெரியாமல் உளறித் தள்ளி கேவலமான அரசியல் செய்தால் தமிழர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை எல்லா அரசியல் வியாதிகளும் உணர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

  karunanidhi

  இப்படி நிறைய தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, காமராஜர் விஷயத்தை உறுதி செய்தனர். முரசொலி நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது, எமெர்ஜென்சி காலத்தில் முரசொலியில் துக்ளக் அச்சானது உண்மை என்றனர்.

  guru

  குருமூர்த்தி பேச்சு எப்படிப்பட்டது என்று ஊருக்கே தெரியும். அது பற்றி கருத்து கூற, விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், ரஜினி போன்ற ஆளுமைகள் பேசும்போது உண்மையை சொல்லாமல் விட்டால் கூட பரவாயில்லை, தவறியும் தவறானவற்றை பேசிவிடக்கூடாது என்பதை துக்ளக் விழா பேச்சு உறுதி செய்கிறது.