முரசொலியை பஞ்சமி நிலமென்று பச்சையாய் புளுகுபவர்களுக்கு இறுதி பதில் : மு.க ஸ்டாலின் அறிக்கை..!

  0
  5
  MK Stalin

  ஸ்டாலின் ஏன் அந்த நிலத்தின் மூலப் பத்திரத்தை வெளியிடாமல் வெறும் பட்டாவை மட்டும் வெளியிட்டார் எனப் பல கருத்துக்கள் எழுந்தன.

  சென்னை மந்தைவெளியில் இருக்கும் முரசொலி கட்டிடம், பஞ்சமி நிலத்திற்குச் சொந்தமானது என்றும் அதனை திமுக வளைத்துப் போட்டு அந்த கட்டிடத்தை கட்டியதாகவும் பா.ம.க தலைவர் ராமதாஸ் முதன்முதலில் அறிக்கை வெளியிட்டார்.

  Murasoli

  அதன் பின்னர், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அந்த நிலத்தின் பட்டாவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதல்ல என்று அறிவிப்பை வெளியிட்டார்.

   

  இருப்பினும், ஸ்டாலின் ஏன் அந்த நிலத்தின் மூலப் பத்திரத்தை வெளியிடாமல் வெறும் பட்டாவை மட்டும் வெளியிட்டார் எனப் பல கருத்துக்கள் எழுந்தன. இதனிடையில், பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சீனிவாசன், முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்திற்குச் சொந்தமானது என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம்  புகார் அளித்தார். 

   

  இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து, ‘முரசொலி நிலம் குறித்து வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதி பதில்!’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளை,ஒவ்வொரு கழகத் தொண்டனின் உயிர் மூச்சுமாக விளங்கும் முரசொலி கட்டிடத்தின் மீது, கேவலம், தற்காலிகமான அரசியல் லாபத்திற்காக, பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல கழகத்தின் எந்தத் தொண்டரும் ஏற்க மாட்டார்கள்.முரசொலி நிலம்  பஞ்சமி நிலத்தைச் சேர்ந்தது என்ற அபாண்டப் பழியை, என்பதை உரிய ஆதாரத்துடன் நிரூபிப்பேன்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.