மும்பையில் உஷார் நிலை… கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் குவிப்பு! அச்சத்தில் மக்கள்

  0
  2
  mumbai

  டெல்லியைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளிலும் வன்முறை வெடிக்கலாம் என்று மத்திய அரசு எச்சரக்கைவிடுத்துள்ளது.குறிப்பாக மும்பையில் வன்முறை சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

  டெல்லியில் வன்முறை சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வரும் சூழலில், மும்பையிலும் அதுபோன்று நடந்துவிடாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  டெல்லியைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளிலும் வன்முறை வெடிக்கலாம் என்று மத்திய அரசு எச்சரக்கைவிடுத்துள்ளது.குறிப்பாக மும்பையில் வன்முறை சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரக்கைவிடுக்கப்பட்டுள்ளது.நாட்டின் பொருளாதார தலைநகரமாக மும்பை உள்ளது.இதனால் அங்கு வன்முறை நடப்பது பொருளாதாரத்தை மேலும் ஆட்டம் காணச் செய்யும் என்று கருதப்படுகிறது.இதனால்,மகாராஷ்டிரா மும்பை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

  mumbai-police

  வன்முறை எச்சரிக்கையைத் தொடர்ந்து மும்பையில் ஆசாத் மைதானம் உள்ளிட்ட எந்த ஒரு இடத்திலும் போராட்டம், பேரணி நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மும்பை போலீசில் அளிக்கப்பட்டிருந்த விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு,அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் தீவிர கெடுபிடி மற்றும் எச்சரிக்கை காரணமாக மும்பை மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.