முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 30 லட்சம் ரூபாய் செலவில் கோயில்!

  0
  2
  Karunanidhi dmk

  முன்னாள் முதல்வரும்  தி.மு.க தலைவருமான  கருணாநிதிக்கு 30 லட்ச ரூபாய் செலவில் கோயில் கட்டும் பணி  தொடங்கியுள்ளது. 

  நாமக்கல்: முன்னாள் முதல்வரும்  தி.மு.க தலைவருமான  கருணாநிதிக்கு 30 லட்ச ரூபாய் செலவில் கோயில் கட்டும் பணி  தொடங்கியுள்ளது. 

  karunanidhi

  தமிழக முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான மு. கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு திமுக தொண்டர்கள் மத்தியில் பேரிழப்பாக அமைந்தது. 

  karunanidhi

  இந்நிலையில் கருணாநிதி மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குச்சிக்காடு கிராமத்தில் கருணாநிதிக்கு 30 லட்ச ரூபாய் செலவில் கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதுகுறித்து கூறும் அப்பகுதிவாசிகள்,  ‘கருணாநிதியின் ஆட்சியின் போது,  தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் 18% சதவீத இட ஒதுக்கீட்டில் 3% அருந்ததியினருக்கு உள்இடஒதுக்கீடாக வழங்கப்பட்டது.அதற்கு நன்றி கூறும் வகையில் அவருக்குக் கோயில் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளோம். முதற்கட்டமாக அடிக்கல்  நாட்டுவிழா நடைபெற்றது’ என்று தெரிவித்தனர். குறிப்பாக இந்த விழாவில் கட்சி பாகுபாடின்றி பலரும் கலந்து  கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.