முத்தூட் நிதி நிறுவன கொள்ளை… வாலண்டரியாக வண்டியில் ஏறிய கள்ளக்காதல் ஜோடி !?

  0
  4
  முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளை

  முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளை போன நகைகள் மற்றும் பணத்தைப் பெண் ஊழியரே கள்ளக் காதலனை வைத்துத் திருடியது அம்பலமாகியுள்ளது. 

  கோவை: முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளை போன நகைகள் மற்றும் பணத்தைப் பெண் ஊழியரே கள்ளக் காதலனை வைத்துத் திருடியது அம்பலமாகியுள்ளது. 

  803 பவுன் நகை கொள்ளை

  robbery

  கோவை ராமநாதபுரத்தில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தில் கடந்த 27-ந் தேதி முத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 803 பவுன் நகை மற்றும் ரூ.1,34,000-ஐ மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். மேலும் அங்கிருந்த பெண் ஊழியர்களை அவர் தாக்கியதாகக் கூறப்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

  இந்தியில் பேசிய கொள்ளையன்

  robbery

   

  முதற்கட்டமாகக் கொள்ளையன் தாக்கியதாக நிதி நிறுவன ஊழியர்களான போத்தனூரை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவரது மனைவி ரேணுகா தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில், கொள்ளையன் இந்தியில் பேசியதாகக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து மற்றொரு ஊழியரான திவ்யா என்பவரையும் போலீசார் விசாரித்தனர். அப்போது தான்  மயக்கத்தில் இருந்ததாக திவ்யா தெரிவித்துள்ளார்.   நிறுவனத்துக்குள் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் அந்த வழக்கில் மர்மம் நீடித்தது. 

  முன்னுக்குப்பின் முரணான பதில்

  cctv

  இதையடுத்து நிறுவனத்தின் அருகிலிருந்த அரிசி மண்டியில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையன் முகத்தில் துணிக்கட்டி கொண்டு ஆட்டோவில் இருந்து இறங்குவது பதிவாகியிருந்தது. இதனால் ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில், கொள்ளையன் கொங்கு தமிழில்  பேசியதாகக் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மீண்டும் மருத்துவமனை சென்று ரேணுகாதேவியிடம் விசாரித்துள்ளனர். இதில் அவர்  முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. 

  கள்ளக்காதலனை வைத்து திருடிய பெண் ஊழியர் 

  muthoot

  இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்த நிலையில், ரேணுகா தேவியின் செல்போனை ஆராய்ந்துள்ளனர். அதில் அவரது செல்போனுக்கு அடிக்கடி வந்த சில அழைப்புகளை  வைத்து கெம்பட்டி காலனியை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

  muthoot

  விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரோட்டை சேர்ந்த சுரேஷுக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்துள்ளனர்.  முத்தூட் நிறுவனத்தில் நகையை அடகு வைக்க சென்ற போது இவருக்கு ரேணுகா தேவியின் பழக்கம் கிடைத்துள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனால் இருவரும் ஆடம்பரமாகத் தனியாக சென்று வாழ திட்டமிட்டுள்ளனர். 

  இதனால் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்திலேயே நகைகளை கொள்ளையடிக்கும் திட்டத்தையும்  தீட்டியுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று உடன் பணிபுரியும்  திவ்யா என்ற ஊழியருக்கு காஃபியில் தூக்க மாத்திரை கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து தனது காதலனை வரவைத்து  2 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை பணத்தைக் கொடுத்தனுப்பியுள்ளார். மேலும் தன்  மீது சந்தேகம் வராமல் இருக்க, தன்னை  கொள்ளையன் தாக்கியதாகக் கூறியுள்ளது அம்பலமானது.

   கைது

  arrest

  அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சுரேஷிடமிருந்து  கொள்ளையடிக்கப்பட்ட 804 பவுன் நகைகள், மற்றும் பணம் மீட்கப்பட்டது. மேலும் இருவரையும் போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.