முதல் முறையாக நாமினேஷனில் சிக்கிய நபர்! அதிர்ச்சியில் ரசிகர்கள் 

  0
  2
  பிக் பாஸ் 3

  பிக் பாஸ் சீசன் தொடங்கி 51 நாட்களை எட்டியுள்ளது. கோவம், சோகம், துரோகம், சிரிப்பு என்று போட்டியாளர்களின் முழு குணமும் வெளியே வந்துவிட்டது.

  பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி 51 நாட்களை எட்டியுள்ளது. கோவம், சோகம், துரோகம், சிரிப்பு என்று போட்டியாளர்களின் முழு குணமும் வெளியே வந்துவிட்டது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்ஷி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

  அதைத்தொடர்ந்து 8வது வாரத்துக்கான நாமினேஷன் படலம் நேற்று நடைபெற்றது. அதில் வழக்கம் போல் அபிராமி, கவின், லாஸ்லியா மற்றும் மதுமிதா ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் இந்த லிஸ்டில் புதிதாக முகின் ராவ் இணைந்துள்ளார். 

  mugan

  இவரை நாமினேட் செய்ததற்கான இரண்டு முக்கிய காரணங்கள், அபி இவர் மேல் பயங்கர posseive-வாக இருப்பது, மற்றவர்களை விட சிறந்த போட்டியாளர் என்பதால். தொடர்ந்து 7 வாரமாக ஒரு தடவை கூட நாமினேஷன் லிஸ்டில் சிக்காமல் வந்த முகன் முதல் முறையாகச் சிக்கியுள்ளது அவரது ரசிகர்கள் இடையே சோகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.