முதல் முறையாக சமந்தா கணவருடன் ஜோடி சேர்ந்த மலையாள டீச்சர்! 

  0
  12
  நாக சைதன்யா

  நடிகை சாய் பல்லவி, நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது

  சென்னை: நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ள அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

  பிரேமம் படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிப் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அதில் மலர் டீச்சராக வலம் வந்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர், மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து தனது மார்க்கெட்டை தூக்கி நிலைநாட்டினார். இவர் கடைசியாக சூர்யாவின் என்.ஜி.கே படத்தில் நடத்துத்திருந்தார். அதனைத் தொடர்ந்து ‘விரத பர்வம் 1992’ என்ற தெலுங்கு படத்தில் ராணாவிற்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.  

  sai pallavi

  இந்த நிலையில் தற்போது ஆனந்த், ஹேப்பி டேஸ் போன்ற படங்களை இயக்கிய சேகர் கம்முலா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு உருவாகவிருக்கும் இப்படத்தின் பூஜை நேற்று (ஜூன் 27) ஹைதராபாத்தில் நடைபெற்றது. 

  மேலும் ஏற்கனவே இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான ஃபிடா படத்தில் சாய் பல்லவி நடித்துத்திருந்து குறிப்பிடத்தக்கது.