முதல் படத்திலேயே போலீஸ் கெட்டப்! விஜயகாந்தின் சினிமா டூ அரசியல் வாழ்க்கை…

  0
  2
  vijayakanth

  ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோ பிரபலமாக இருந்த காலத்தில் தனக்கென ஒரு ஸ்டைலை அமைத்துக்கொண்டு சினிமா உலகத்திற்குள் காலடி எடுத்துவைத்தவர் விஜயகாந்த்

  ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோ பிரபலமாக இருந்த காலத்தில் தனக்கென ஒரு ஸ்டைலை அமைத்துக்கொண்டு சினிமா உலகத்திற்குள் காலடி எடுத்துவைத்தவர் விஜயகாந்த்

  முதல் படத்திலேயே போலீஸ் கெட்டப் போட்டு மாஸ் காட்டிய விஜயகாந்திற்கு கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், வைதேகி காத்திருந்தாள், உளவுத்துறை, ரமணா, புலன் விசாரணை ஆகிய படங்கள் திருப்பு முனையாக அமைந்தன. காஷ்மீர் பற்றி இந்தியா இப்போது பேசினாலும் கூட 20 வருடத்திற்கு முன்பே காஷ்மீர் குறித்து படங்களாக வெளியிட்டு ஹிட் கொடுத்தவர்தான் நடிகர் விஜயகாந்த்.

  vijayakanth

  சினிமாவில் எப்படி தனக்கென ஒரு ஸ்டலை பின்பற்றினாரோ அரசியலிலும் தனக்கென ஒரு பாணியை பின்பற்றினார். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து சாதனை படைத்தவர்களின்  வரிசையில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜயகாந்தே என்று சொல்லலாம். இப்போது பல கிராமங்களில் விஜயகாந்தின் படத்தை மட்டுமல்லாது கட்சியையும் ஆதரிக்க பெருங்கூட்டம் உள்ளது. 

  vijayakanth

  கட்சித்தொடங்கிய உடனே இவர் வளர்ந்துவிட வில்லை. பல தடைகளை தாண்டி தன் முரசு சின்னத்தை  மக்களிடம் கொண்டு சேர்த்தார். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுடனே கூட்டணி வைத்து அவருக்கு எதிராகவே அமர்ந்து சவால் விட்ட தைரியம் விஜயகாந்துக்கு மட்டுமே உள்ளது.