முதல் ஆளாக வாக்கு எண்ணிகை மையத்தை விட்டு வெளியேறிய கமீலா நாசர்!

  0
  2
  கமீலா நாசர்

  மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட்ட நாசரின் மனைவி கமீலா நாசர், வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு அப்செட்டில் வெளியேறினார்.

  சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட்ட நாசரின் மனைவி கமீலா நாசர், வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு அப்செட்டில் வெளியேறினார்.

  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த 17வது மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்தத் தேர்தலில் பி.ஜே.பி முன்னிலையில் வகித்து வருகிறது. இதுதவிர, தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் இரண்டிலும் தி.மு.க முன்னிலை வகித்து வருகிறது.

  இந்த நிலையில் தென் சென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் முன்னிலையில் உள்ளார். அதைத்தவிர அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் சாம்பால் சற்றே பின்தங்கி உள்ளார். அதேநேரத்தில், இரண்டாவது இடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளரும் இயக்குநர் மற்றும் நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் மாறிமாறி வருகிறார்.

  இதனால் வருத்தமடைந்த கமீலா நாசர் தனது தோல்வி உறுதியானது என்பதைப் புரிந்துகொண்டு வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு கிளம்பியுள்ளார்.