முதல்வர் பதவியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு : படுதோல்வியால் இன்று ராஜினாமா!

  0
  1
  சந்திரபாபு நாயுடு

  ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி   ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்.,

  ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதை அடுத்து, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தன் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார். 

  ys jagan

  ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி   ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்., 149 இடங்களில்   முன்னிலையில் உள்ளது. ஆளுங்கட்சியான சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி  25 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. 

  chandrababu

  இதனால் முதல்முறையாக ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்கிறார். இதையடுத்து  சந்திரபாபு நாயுடு, தனது பதவியை இன்று மாலை ராஜினாமா செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன